நேபாளம் நிலநடுக்கம் 
சர்வதேசம்

அதிர்ச்சி; நேபாளத்தை அதிர வைத்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு!

காமதேனு

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.

பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதன் காரணமாக வீடுகள் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 10 மணி நிலவரப்படி 129 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர்

இந்த நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாளம் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ராணுவ ஹெலிகாப்டரில் மூலம் பார்வையிட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT