சர்வதேசம்

மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஆண்டு சம்பளம், செலவு எவ்வளவு தெரியுமா?- ஆச்சரிய தகவல்

காமதேனு

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஆண்டு சம்பளம் மற்றும் அவரது பாதுகாப்புக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சமூக வலைதளம் பறந்துவிரிந்துவிட்டது. அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் என பெயர் மாற்றினார் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஆண்டு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வழி காட்டு நெறிமுறைகள், தனி விமானம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 26.8 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு ஊதியமாக ஆண்டுக்கு ஒரு டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்புபடி 76 ரூபாய்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மெட்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான செரீப் பாதுகாப்புக்கு மட்டும் ஆண்டுக்கு 83 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT