சர்வதேசம்

ரணில் பிரதமரானதில் இந்தியாவிற்குத் தொடர்பா?: தூதரகம் விளக்கம்

காமதேனு

ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமரானதன் பின்னணியில் இந்தியா இல்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன் பின் அவர் கூறுகையில், " இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இலங்கையில் ஓர் உறுதியான அரசு அமைய வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும். அதற்காக ஓர் உறுதியான அரசு அமைய வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம். அதேவேளை, பிரதமராக ரணில் அல்ல, வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம்" என்றார்.

SCROLL FOR NEXT