சர்வதேசம்

'இவர்களின் வீடுகளைச் சேதப்படுத்துங்கள்' : இலங்கை கலவரத்திற்கு காரணமான முக்கிய பிரமுகர் சிக்கினார்!

காமதேனு

இலங்கையில் முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வீடுகளைச் சேதப்படுத்துமாறு முகநூல் வழியாக வன்முறையைத் தூண்டிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக கொழும்புவில் தொடர் போராட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமையன்று மகிந்தா ராஜபக்ச ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மகிந்தா ராஜபக்ச வீடு, கட்சி அலுவலகம், எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் முகநூல் மூலம் வன்முறையைத் தூண்டி விட்ட முன்னாள் ராணுவ அதிகாரி தேசிககுரூப் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வீடுகளைச் சேதப்படுத்துமாறு முகநூல் வழியாக அவர் வன்முறையைத் தூண்டியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT