இந்தோனேசியாவில் அதிகாலை நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் அதிகாலை நிலநடுக்கம் இந்தோனேசியாவை குலுங்க வைத்த நிலநடுக்கம்: மக்களை அச்சுறுத்திய சுனாமி எச்சரிக்கை
சர்வதேசம்

இந்தோனேசியாவை குலுங்க வைத்த நிலநடுக்கம்: மக்களை அச்சுறுத்திய சுனாமி எச்சரிக்கை

காமதேனு

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறினர். எனினும், இரண்டு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் அதிகாலை இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவிலிருந்து 21 கி.மீ தொலைவில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. தொடரும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT