உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்...
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்... 
சர்வதேசம்

அடுத்தடுத்து 3 ஏடிஎம்களை உடைத்து கோடிக்கணக்கில் கொள்ளை: அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காமதேனு

தென் இலங்கையில் 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற இருவர் குறித்து அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 2 நாட்களுக்கு முன், நாரஹேன்பிட்டியில் உள்ள அரசு வங்கி ஏடிஎம் இயந்திரம் மீது இருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில்,தென் இலங்கை ஹிக்கடுவ நகரில் உள்ள மக்கள் வங்கி ஏடிஎம் இயந்திரத்திற்குள் அதிகாலை 1:30 மணியளவில் இருவர் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை மூடிவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.46.08 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். மேலும் காலிகராபிட்டிய நகரில் உள்ள மக்கள் வங்கி ஏடிஎம் மையத்தில் அதிகாலை 3:22 மணிக்குச் சென்ற ஒரு மர்மக்கும்பல் அங்கிருந்த ரூ.2.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவர் தாங்கள் விட்டு சென்ற ஒரு பொருளை எடுத்து கொண்டு ஆங்கிலத்தில் பேசியவாறு வெளியேறி உள்ளனர். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இருவரின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஏடிஎம் இயந்திரத்தை சோதனை செய்துள்ளார்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா கருப்பு கவர் போட்டு மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது. பத்தேகம நகரில் உள்ள அரசு வங்கி ஏடிஎம் மையத்துக்கு அதிகாலை 4 மணியளவில் சென்ற அக்கும்பல், அங்கு, ரூ.57 லட்சத்தைக் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் தொடர்ந்து நடந்துள்ள இந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கணினி வழி குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT