சர்வதேசம்

கால்வாயில் மூழ்கித் துடித்து இறந்த 8 குழந்தைகள்: நடந்தது என்ன?

காமதேனு

கெய்ரோவில் ரிக்‌ஷா நீர் பாசனக் கால்வாயில் கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை அவர்களின் வீடுகளில் விடுவதற்கு ரிக்‌ஷா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி வேலை முடிந்தவர்கள் ஒரு ரிக்‌ஷாவில் சென்ற போது நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி ரிக்‌ஷாவில் இருந்த 8 குழந்தைகளும் உயிரிழந்தனர். 4 பேர் உயிர் தப்பினர்.

இதில் உயிர் தப்பிய ரிக்‌ஷா ஓட்டுநர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தியவர்களுடன் தொடர்பில் இருந்தவரா என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 8 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT