இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில் சிதைந்த கட்டிடம் 
சர்வதேசம்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்... 31 பாலஸ்தீனர்கள் பலி!

காமதேனு

ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 31 பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு(கோப்பு படம்)

கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பயணக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்ட போது, அதில் 130 பேர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதல்

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் அரசு அறிவித்ததுடன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அத்துடன் பயங்கரவாதிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ்க்கு எதிராக கடந்த நான்கு மாதங்களாக போர் நடந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால், எகிப்து எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், ரபா நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர். பாலஸ்தீனப் பகுதியை விட்டு செல்ல முடியாமல், முகாம்களிலும், ஐ.நா. நடத்த கூடிய காப்பகங்களிலும் அவர்கள் தங்கியுள்ளனர். இதன் காரணமாக காப்பங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தப் போரால் பாலஸ்தீனர்கள் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT