டெங்கு கொசு 
சர்வதேசம்

அதிர்ச்சி... டெங்குவுக்கு 1000 பேர் பலி... கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்!

காமதேனு

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த சில வாரங்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள்

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துவிட்டதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்பட்ட டெங்குவால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அதிகளவில் மரணங்கள் நிகழ்கின்றன.

தலைவலி, குமட்டல், மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலானது எப்போதேனும் காணப்படும். ஆனால் காலநிலை திடீரென்று மாறவும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.

மருத்துவமனையில் நோயாளிகள்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெங்குவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது என அதிகாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே டெங்கு பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வங்கத்தேச அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT