வசந்தம் கார்த்திகேயன்
வசந்தம் கார்த்திகேயன் 
ஹாட் லீக்ஸ்

வசந்தம் வளமாகும் ரகசியம்?

காமதேனு

கல்லக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயன், அமைச்சர் எ.வ.வேலுவிடம் ரொம்பவே நெருக்கம் பாராட்டுகிறாராம். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி என சத்தான துறைகளின் அமைச்சராக வேலு இருப்பதால் அந்த நெருக்கத்தை வைத்து, டிரான்ஸ்ஃபர்களிலும் காண்ட்ராக்ட்களிலும் வளம் கொழிக்கிறாராம் வசந்தம். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களில் வசந்தம் நினைத்தால் எதையும் சாதிப்பார் என்கிற அளவுக்கு பேராகிக் கிடக்கிறது. இவர் இப்படி தாட்டியம் செய்வதால், தங்களால் எதையும் சாதித்துக்கொள்ள முடியவில்லையே என ஏங்கித் தவிக்கும் இந்த மாவட்டங்களின் ஆளும்கட்சி முக்கிய தலைகள், வசந்தம் ’வளமாகும்’ ரகசியங்களை எல்லாம் அவ்வப்போது தலைமையின் கவனத்துக்கு தட்டிவிட்டபடி இருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT