காலில் விழும் மேயர்...
காலில் விழும் மேயர்... படம்: ஆர்.வெங்கடேஷ்
ஹாட் லீக்ஸ்

சங்கடப்படுத்திய சண்.ராமநாதன்!

காமதேனு

ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும் விஷயம் என்பதாலேயே காலில் விழும் கலாச்சாரத்தை கருணாநிதி அறவே வெறுத்தார். ஸ்டாலினும் இதை அனுமதிப்பதில்லை. ஆனால் எதையாவது செய்து தலைமைக்கு விசுவாசம் காட்டிக்கொள்ள நினைக்கும் உடன்பிறப்புகள், காலில் விழும் கலாச்சாரத்தை இன்னமும் விடமாட்டேன் என்கிறார்கள். கடந்த வாரம், திமுகவினருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்காக தஞ்சைக்கு வந்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். அதுசமயம் மாநகராட்சியிலும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அவரை வரவேற்க வாசலுக்கு வந்துநின்ற தஞ்சை மேயர் சண்.ராமநாதன், தடாலடியாக உதயநிதியின் காலில் விழுந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். சும்மா விழுந்திருந்தால்கூட சர்ச்சையாகி இருக்காது. மேயர் அங்கியையும் அணிந்துகொண்டு இந்தக் காரியத்தைச் செய்ததால் சமூக வலைதளங்களில் சண்.ராமநாதனோடு சேர்த்து திமுகவையும் சகட்டுமேனிக்கு வறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT