கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில்...
கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில்... 
ஹாட் லீக்ஸ்

மீண்டும் ஜனநாயகப் பேரவையா?

காமதேனு

இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்தலில் கே.எஸ்.அழகிரி தரப்பில் விச்சு லெனின் பிரசாத்தும், கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜெரால்டு ஜோஸ்வாவையும் நிறுத்தினார்கள். முடிவில், ஜோஸ்வாவை பின்னுக்குத் தள்ளி லெனின் பிரசாத் வெற்றிபெற்றார். இப்போது லெனின் பிரசாத் தலைவர். ஜோஸ்வா துணைத் தலைவர்.

விச்சு லெனின் பிரசாத்

இந்த நிலையில் மே தினத்தன்று, மாநில அளவில் வெற்றிபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை காரைக்குடிக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார். இதில், கார்த்திற்கு வேண்டப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...

அவரது சொந்த மாவட்டமான சிவகங்கையிலேயே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் இல்லாதபோதும் துணைத் தலைவர் ஜோஸ்வாவை வைத்து கூட்டத்தை நடத்தினார்கள். காங்கிரஸ் கொடி, சோனியா, ராகுல் படம் என காங்கிரஸ் சம்பந்தப்பட்ட எந்த அடையாளமும் வைக்கப்படாத இந்தக் கூட்ட மேடையில், “கட்சிக்காக மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். அவரைவிட இருமடங்கு உழைக்கக்கூடிய தலைவர் தான் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்குத் தேவை” என ப.சிதம்பரம் பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது. இதுதான் சமயமென, “அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து மீண்டும் ‘ஜனநாயகப் பேரவை’க்கு அடிப்போடுகிறார்களா?” என சிவகங்கை சீமைக்குள்ளேயே சிலர் கொளுத்திப்போட்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT