ஹாட் லீக்ஸ்

ஆடிட்டர் தந்த அட்வைஸ்!

காமதேனு

ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 27-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் நடந்தது. அப்போது தேனியில் இருந்த ஓபிஎஸ், இதையறிந்து அவசரமாக சென்னைக்குத் திரும்பினார். அவரும் அதிமுக தலைமையகம் செல்வார் என ஆருடங்கள் சொல்லப்பட்ட நிலையில், அப்படி ஏதும் செய்யவில்லை ஓபிஎஸ். அதற்கு பதிலாக, அன்றிரவு துக்ளக் ரமேஷ் வீட்டில் நடந்த சிறு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டாராம். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியரும் ஓபிஎஸ்சும் சற்று நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல் சொல்பவர்கள், “குருமூர்த்தி தந்த அட்வைஸ் படிதான் அதிமுக தலைமையகம் செல்லாமல் தவிர்த்தார் ஓபிஎஸ். மேலும், பாஜகவின் தலையீடு இல்லாமல் இனி பழனிசாமியை சமாளிப்பது சிரமம் என்பதால் குருமூர்த்தி மூலமாக பாஜக டெல்லி தலைமைக்கு தூது அனுப்பி இருக்கிறார் ஓபிஎஸ். ஆக, பாஜக தலைமை யாரை ஆதரிக்கிறது என்பது பொதுக்குழுவுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும்” என்று காதைக் கடிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT