ஹாட் லீக்ஸ்

உனக்கெல்லாம் எதுக்குய்யா ஒன்றியச் செயலாளர் பதவி?

காமதேனு

காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலாளராக தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் பி.எம்.குமார். இம்முறையும் தனக்கே ஒன்றியம் என்ற தெம்பில் இருந்தார். ஆனால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரான எம்.எஸ்.சுகுமார் போட்டிக்கு வந்தார். அப்படியும் அசராத குமார், “ரெண்டு பேரும் மனு கொடுப்போம். யாருக்கு தலைமை சொல்கிறதோ ஏத்துக்குவோம்” என்று சொன்னதுடன், தனக்கும் சேர்த்து சுகுமாரையே வேட்பு மனுவுக்கு பணம்கட்டச் சொல்லிவிட்டு அசாத்திய நம்பிக்கையில் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டாராம். ஆனால், சுகுமார் தனக்கு மட்டும் மனுத் தாக்கல் செய்து, அதற்கான பணத்தை மட்டும் கட்டிவிட்டாராம். இதையடுத்து, சுகுமார் போட்டியின்றி ஒன்றியச் செயலாளராக தேர்வானதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். விஷயமறிந்து பதறிப்போன குமார் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் ஓடிப்போய், சுகுமார் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக புலம்பினாராம். இதைக் கேட்டு டென்ஷன் ஆன அன்பரசன், “பணத்தைக் கட்ட துப்பில்ல... உனக்கெல்லாம் எதுக்குய்யா ஒன்றியச் செயலாளர் பதவி?” என்று குமாருக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி அனுப்பிவிட்டாராம்.

SCROLL FOR NEXT