அன்பரசனின் காலில் விழுந்தபோது...
அன்பரசனின் காலில் விழுந்தபோது... 
ஹாட் லீக்ஸ்

இதுதான் திராவிட மாடலா அமைச்சரே..?

காமதேனு

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் திமுக இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘திராவிட மாடல் ஆட்சி’ குறித்தும் சுயமரியாதை குறித்தும் தனக்கே உரிய பாணியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சி முடிந்து புறப்படுகையில், ஸ்ரீபெரும்புதூர் கவுன்சிலர் வீரபத்திரனின் மனைவி, சகோதரி, குழந்தைகள் என ஒரு குடும்பமே திடீரன அமைச்சரின் காலில் விழுந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு கவுன்சிலர் வீரபத்திரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாம். அதில் சம்பந்தப்பட்டவரை இன்னும் கைதுசெய்யவில்லை என வீரபத்திரனின் மனைவி அமைச்சரிடம் கதறினார். அவருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். போகும் வழியிலேயே வீரபத்திரன் விவகாரம் தொடர்பாக விசாரித்தாராம் அமைச்சர். “இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் பாதிப்பை ஏற்படுத்தியவரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு உறவினர்கள். இரு தரப்பினர் மீதுமே வில்லங்க வழக்குகள் நிலுவையில் இருக்கு. எனவே, இந்த விவகாரத்தில் யாருக்கு ஆதரவாகவும் பேசவேண்டாம்” என கட்சிக்காரர்கள் எடுத்துக் கொடுத்தார் களாம். இதைக் கேட்டதும் எந்தப் பஞ்சாயத்தும் வேண்டாம் என அப்படியே சைலன்ட் ஆகிவிட்டாராம் அமைச்சர். இதனிடையே, வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் அன்பரசனின் காலில் விழுந்த படத்தை எடுத்துப் போட்டு, ‘இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடையாளமா?’ என சமூக வலைதளங்களில் சிலர் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT