எஸ்.பி.சண்முகநாதன் (வலது)
எஸ்.பி.சண்முகநாதன் (வலது) 
ஹாட் லீக்ஸ்

கோட்டைவிட்டாலும் கோஷ்டி சண்டை ஓயல!

காமதேனு

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 6 மட்டுமே இம்முறை அதிமுகவுக்கு சிக்கியது. அமைச்சர் கீதா ஜீவன் தனது சகோதரர் ஜெகனை மேயராக்க வேண்டும் என்பதற்காக ‘திட்டமிட்டு’ காரியமாற்றினார். ஆனால், அதிமுக தரப்பில், அப்படி யாரும் ‘பொறுப்பாக’ செயல்படவில்லை. அதனால், முடிந்தவர்கள் மட்டுமே கரையேறினார்கள். அதனால் தான் அதிமுக இங்கே ஒற்றை இலக்க வெற்றிகண்டது. யதார்த்தம் இப்படியிருக்க, தோல்வியிலும் இப்போது கோஷ்டி அரசியல் கும்மி அடிக்கிறது.

செல்லப்பாண்டியன்

மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கும், முன்னாள் அமைச்சர் செல்லப் பாண்டியனுக்கும் இங்கு தீராத அரசியல் பகை இருக்கிறது. இந்த நிலையில், தனது மகன் ராஜாவை மாநகராட்சி கவுன்சிலராகவும், தனது மகளும் மருத்துவருமான புவனேஸ்வரியை தனது சொந்த ஊரான பெருங்குளம் பேரூராட்சிக்கு சேர்மனாகவும் ஜெயிக்க வைத்து விட்டார் சண்முகநாதன். இப்போது இதை வம்படியாய் பிடித்துத் தொங்கும் செல்லப்பாண்டியன் தரப்பு, “தனது வாரிசுகளைப் பதவியில் அமர்த்த அக்கறைப்பட்ட சண்முகநாதன், மாநகராட்சி அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை” என தலைமையிடம் புகார் சொல்லி இருக்கிறதாம்.

SCROLL FOR NEXT