கல்யாணசுந்தரத்துடன் அன்பழகன்
கல்யாணசுந்தரத்துடன் அன்பழகன் 
ஹாட் லீக்ஸ்

அன்புக்கு அணைபோட்ட கல்யாணம்!

காமதேனு

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ். கல்யாணசுந்தரம் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டதால் அவரது மா.செ பதவியை இம்முறை தனக்காக கேட்டாராம் கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை அன்பழகன். தலைமையிலும் இவருக்குச் சாதகமான மூவ்கள் நடந்ததைப் பார்த்துவிட்டுப் பதறிப்போனாராம் கல்யாணசுந்தரம். ஏனென்றால், அண்மையில் தான் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கட்ட உதயநிதியை வைத்து அடிக்கல் நாட்டினார் கல்யாணம். “ரொம்பப் பிரயாசைப்பட்டு இந்த அலுவலகம் கட்டுறேன். கட்டி முடிச்சு திறக்கிற வரையாவது மாவட்டச் செயலாளரா இருந்துக்கிறேன்” என கல்யாணம் உருக்கமாகச் சொன்னதை தலைமையும் ஏற்றுக்கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT