குரூப் 4 தேர்வு 
அறிவொளி

குட்நியூஸ்... 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு!

காமதேனு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட  பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் 9-ம் தேதியன்று குரூப் 4 தேர்வு நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம்

அரசு வேலைக்கு ஆசைப்படுபவர்கள்  பெரும்பாலும் குரூப் 4 தேர்வை  எதிர்நோக்கி காத்திருப்பது வழக்கம். காரணம் குரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதும் என்பதுதான்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில்  தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப ஜூன் 9-ம் தேதி அன்று குரூப் 4 தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முற்றிலும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக பிப்ரவரி 28-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம்  4 -ம் தேதி முதல் 6-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களை திருத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணி முதல் 12.30 வரையும் தேர்வு நடைபெறும் என்றும், தேர்வில் கலந்து கொள்வோர் அலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT