ஆன்மிகம்

பச்சை பட்டுடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

காமதேனு

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று பச்சை பட்டுடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம், தேர்திருவிழா ஆகியவை முடிவுற்ற நிலையில், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வைபவம் நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கள்ளழகரின் அருளாசியை பெற்றனர்.

SCROLL FOR NEXT