கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் 
க்ரைம்

சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை... பலத்த போலீஸ் பாதுகாப்பு!

காமதேனு

பெண்களை இழிவுபடுத்தி பேசிய புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சேலம், திருச்சி, சென்னை, முசிறி உள்ளிட்ட இடங்களிலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, தேனி போலீஸாரால் அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீஸாரும் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை தேனி போலீஸார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் போலீஸார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் இன்று அழைத்து வந்தனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு வீல் சேரில் அமர்ந்து அழைத்துச் செல்ல செவிலியர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டு நடந்து மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றார். வலது கையில் முறிவு ஏற்பட்டதா... எந்த மாதிரி காயம் உள்ளது... என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீஸார் 5 நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

SCROLL FOR NEXT