க்ரைம்

`நான் மதபோதகர், உன்னை திருமணம் செய்ய முடியாது'- 2 முறை கருவை கலைத்த பெண் புகார்

காமதேனு

பாலியல் உறவு வைத்துக் கொண்டு 2 முறை கருவை கலைக்க வைத்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பவானில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் வசித்து வரும் அகிலா (பெயர் மாற்றம்) என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபு (26, பெயர் மாற்றம்) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரை அருகே இருந்து கவனிப்பீர்களா? என்றும் பிரபு கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த அகிலா, கடந்த 2017-ம் ஆண்டு பிரபு வீட்டுக்கு சென்று அவரது தாயாருக்கு உதவியாய் இருந்துள்ளார்.

அப்போது, இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதன் விளைவாக அகிலா கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அறிந்த பிரபு, உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அகிலாவை சமாதானப்படுத்தியதோடு, சேலம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார். இதன் பின்னரும், அகிலாவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்துள்ளார் பிரபு. இதனால், மீண்டும் கர்ப்பமானார் அகிலா. மறுபடியும் அகிலாவை சேலம் அழைத்து சென்று மனைவி என்று டாக்டர்களிடம் கூறி கர்ப்பத்தை கலைத்துள்ளார். இதற்கு பிரபுவின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதன் பின்னர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுவை அகிலா வற்புறுத்தியுள்ளார். இதனிடையே, வேதம் படிப்பதற்காக மகாராஷ்டிரா சென்றுவிட்டார் பிரபு. தற்போது, மதபோதகராக திரும்பி வந்துள்ள பிரபுயை சந்தித்த அகிலா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அப்போது, "நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது" என்று மறுத்திருக்கிறார் பிரபு.

இந்நிலையில், பிரபு மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அகிலா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT