க்ரைம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்த முயன்ற ரூ. 10 கோடி மதிப்பு போதைப்பவுடர்!

காமதேனு

ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள 'சூடோபெட்ரின்' என்ற போதைப்பவுடர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகளும், விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வந்திருந்த பார்சல்களைச் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்கு அனுப்ப இருந்த பெட்டிகளைப் பிரித்து சோதனை செய்தனர். அப்போது பேப்பர் கட்டுகளுக்கு அடியில் போதை மருந்து மறைத்துக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. 'சூடோபெட்ரின்' என்ற வகையைச் சேர்ந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 49.2 கிலோ போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT