போலீஸார் தேடும் சத்யநாராயண ரெட்டி 
க்ரைம்

விபசாரத்திற்கு கால் கேர்ள் தேவையா?... முகநூலில் மனைவி செல்போன் எண்ணைப் பதிவிட்ட கணவன்!

காமதேனு

பெங்களூருவில் தனது மனைவி, அவரது சகோதரி செல்போன் எண்களோடு சமூக வலைதளத்தில் விபசாரத்திற்கு கால் கேர்ள் வேண்டுமா என பதிவிட்ட வாலிபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சத்யநாராயண ரெட்டி. இவர் கலாஷாஷி என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் விவாகரத்திற்கு விண்ணப்பித்த தனது மனைவி, அவரது சகோதரி, சகோதரரின் செல்போன் எண்களைப் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவில், விபசாரத்திற்கு கால் கேர்ள் தேவையா என பதிவிட்டிருந்தார். இதனால் இந்த எண்களைப் பார்த்த பலர், அந்த செல்போன் எண்களுக்குத் தொடர்பு கொண்டு தொல்லை தந்துள்ளனர்.

அப்போது தான் இந்த முகநூல் பதிவு குறித்து விவகாரம் சத்யநாராயண ரெட்டி மனைவியின் குடும்பத்தாருக்குத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், நந்தினி லே வுட் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," சத்யநாராயண ரெட்டிக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அன்றில் இருந்து மனைவிக்கு பல்வேறு வகையில் அவர் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒருவருடமாக அந்த பெண்ணை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர் துன்புறுத்தியுள்ளார். இதனால் விவாகரத்து கோரி அந்த பெண் விண்ணப்பித்துள்ளார். இதனால் அவரையும், அவரது குடும்பத்தாரையும் பழிவாங்க சத்யநாராயண ரெட்டி முடிவு செய்துள்ளார்.

நந்தினி லே வுட் காவல் நிலையம்

அதற்காக கலாஷாஷி என்ற பெயரில் முகநூல் பக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். அதில் அவரது மனைவி, அவரது சகோதரி, சகோதரர் ஆகியோரின் செல்போன் எண்களைப் பதிவு செய்து விபசாரத்திற்கு கால் கேர்ள் தேவையா என பதிவிட்டுள்ளார். இதனால் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பலர் தொல்லைக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சத்யநாராயண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அவர் இந்தியாவை விட்டு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்" என்று கூறினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT