க்ரைம்

மத உணர்வை புண்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்... ஆதரவாக களமிறங்கிய இந்து அமைப்பு!

காமதேனு

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

முன்னாள் காவலர் கிறிஸ்டோபர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் கிறிஸ்துவ பாடல் ஒன்றை பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன் அக்குழுவில் சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணி அமைப்பினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், வாட்ஸ்அப் குழுவில் இந்துக்களை அவமதித்து, கிறிஸ்தவ பாடலை பதிவிட்ட முன்னாள் காவலர் கிறிஸ்டோபர் மீது முதலில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வாளர் என்ன பதிவு செய்தாரோ அதனை முழுமையாக வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்படைத் தன்மையாக அது வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் திமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பெரும்பான்மை இந்துக்களான பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காவல் துறையிலும் இந்துக்களாக பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, இந்துக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT