அணையில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் 
க்ரைம்

படகு கவிழ்ந்து விபத்து... நீரில் மூழ்கிய 6 பேரின் கதி என்ன? 2வது நாளாக தேடும் பணி தீவிரம்!

கே.காமராஜ்

மகாராஷ்டிராவில் அணை நீரில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 6 பேரை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கலசி கிராமத்தில், உஜ்ஜைனி அணை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலாத் தலமான இந்த பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இங்கு படகு போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இந்த படகு போக்குவரத்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

ஒருவர் கரைக்கு நீந்தி வந்த நிலையில் மற்ற 6 பேரின் கதி என்ன என்பது குறித்து கவலை

இந்த நிலையில் நேற்று மாலை படகு ஒன்றில் 7 பேர் ஏறி, உஜ்ஜைனி அணையில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை பெய்தததால், அணை நீரில் திடீரென அலைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கிய படகு தத்தளித்து சிறிது நேரத்தில் அணை நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் இருந்த சோலாப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராகுல் டோங்ரி என்பவர் நீச்சல் தெரிந்ததால் அணையில் இருந்து நீந்தி கரையை அடைந்துள்ளார். ஆனால் மற்ற 6 பேரும் அணை நீரில் மூழ்கி மாயமானார்கள்.

அணையில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

கரைக்கு வந்த ராகுல் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அணையில் நீண்ட நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இரவு கவிழ்ந்ததால், மீட்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தற்போது அணை நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT