தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையா (வட்டத்துக்குள் இருப்பவர்)
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையா (வட்டத்துக்குள் இருப்பவர்) 
க்ரைம்

வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்: உயிரை மாய்த்துக் கொண்ட பாமக நிர்வாகி

காமதேனு

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் இளங்கோ தெருவில் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றவேண்டி பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, துணை பொறியாளர் ஜெயக்குமாரி, உதவி பொறியாளர் ராஜ்திலக், பாலாஜி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணையா

இந்நிலையில் திடீரென அதே பகுதியில் வசித்து வரும் பாமக மாநில குழு உறுப்பினர் கண்ணையா(60) என்பவர் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீகுளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்து பின்னர் கண்ணையாவை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மைலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தாறிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடரந்து கோவிந்தசாமி நகர், மற்றும் இளங்கோ தெருவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT