உயிரிழந்த ஹேமச்சந்திரன்
உயிரிழந்த ஹேமச்சந்திரன் 
க்ரைம்

கொழுப்பு நீக்கு அறுவை சிகிச்சையால் வாலிபர் திடீர் மரணம்... ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்!

காமதேனு

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உடல் எடை குறைப்பிற்காக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். 150 கிலோ எடை இருந்த அவருக்கு கொழுப்பு நீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை துவங்கிய 15 நிமிடங்களில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சங்கர் நகர் காவல் நிலையம்

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஹேமச்சந்திரனின் பெற்றோர், சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் ஹேமச்சந்திரனின் பெற்றோரிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் பெற்றோரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவறு இழைக்கப்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பெற்றோர்களுக்கு உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT