பனங்காட்டுப்படை தலைவர் ராக்கெட் ராஜா
பனங்காட்டுப்படை தலைவர் ராக்கெட் ராஜா 
க்ரைம்

ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது... உயர் நீதிமன்றம் அதிரடி!

காமதேனு

போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய ராக்கெட் ராஜாவின் மனுவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் பனங்காட்டுப்படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு வாகன சோதனை நடைபெற்ற போது, காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு ராக்கெட் ராஜா தப்பிச் சென்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

பனங்காட்டுப்படை தலைவர் ராக்கெட் ராஜா

இதனிடையே 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 21ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே தன் மீது போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராக்கெட் ராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை ரத்து செய்யக்கோரிய ராக்கெட் ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இதில் தொடர்பு இல்லை எனக் கூற எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி அவரது மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

SCROLL FOR NEXT