வருமான வரித்துறை 
க்ரைம்

பரபரப்பு: சென்னையில் ஜவுளி அதிபர், தொழிலதிபர்களின் வீடுகளில் ஐ.டி அதிரடி ரெய்டு!

காமதேனு

சென்னையில் ஜவுளி நிறுவன அதிபர் மற்றும் தொழிலதிபர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை

சென்னையில் ஜவுளி நிறுவன அதிபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், மற்றும் அவர்களது தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூரு வழக்கு ஒன்றில் கிடைத்த தகவலை அடிப்படையில் பெங்களூரு அதிகாரிகள் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் வேப்பேரி, கேகே நகர், நுங்கம்பாக்கம், பட்டாளம், மயிலாப்பூர், தி.நகர், கோபாலபுரம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

மேலும் கே.கே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவன அலுவலகம், வேப்பேரி பிரின்ஸ் பாரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் பாரஸ்மால் வீடு மற்றும் பட்டாளம், தி. நகர், நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் தொழிலதிபர்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் அவர்களது தொடர்புடைய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனைக்குப் பிறகு இது தொடர்பான விரிவான தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT