கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை. உள்படம் கொலை செய்யப்பட்ட மல்லவ்வா, கைது செய்யப்பட்ட சிவப்பா.
கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை. உள்படம் கொலை செய்யப்பட்ட மல்லவ்வா, கைது செய்யப்பட்ட சிவப்பா. 
க்ரைம்

பகீர்...கோடாரியால் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்த கணவன்: நடத்தையில் சந்தேகம்!

காமதேனு

நடத்தையில் சந்தேகப்பட்டு கோடாரியால் மனைவியை கண்டம், துண்டமாக கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டம், நவலகுண்டா தாலுகா அயட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா பல்லுரா. இவரது மனைவி மல்லவ்வா. இவர்களுக்குத் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகளாகிறது. திருமணமானதில் இருந்த மல்லவ்வாவின் நடத்தையின் மீது அவரது கணவர் சிவப்பாவிற்கு சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உறவினர்கள் தலையிட்டு அவ்வப்போது பிரச்சினையை தீர்த்து வைத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவப்பா, தனது மனைவி மல்லவ்வாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மல்லவ்வாவை கோடாரியால், சிவப்பா கண்டம், துண்டமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மல்லவ்வா உயிரிழந்தார். இதனால் அங்கிருந்து சிவப்பா தப்பியோடி விட்டார்.

வீட்டில் மல்லவ்வா கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், உடனடியாக நவ்லகுண்டா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மல்லவ்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் விசாரணை நடத்திய போது, சிவப்பா பல்லுரா, அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பதுங்கியிருந்த சிவப்பாவை போலீஸார் கைது செய்தனர். எதற்காக நடத்தையில் சந்தேகம் கொண்டு மல்லவ்வாவை கொலை செய்தாரா, வேறு பிரச்சினையால் வெட்டிக்கொலை செய்தாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

SCROLL FOR NEXT