க்ரைம்

`பல கோடி ரூபாய் இரிடியம் மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது'

காமதேனு

பல கோடி ரூபாய் இரிடியம் மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் ராம்பிரபு (எ) ராஜேந்திரன். இவர் இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். இது குறித்து சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முகம்மது தமீம் பேக் என்பவர் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராம்பிரபுவை கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராம்பிரபு, உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இரிடியம் மோசடி வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்போதுள்ள சூழலில் வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீஸார் விசாரணையை 12 வாரத்தில் முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT