க்ரைம்

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலி போலீஸ்: நள்ளிரவு தணிக்கையில் நடந்த அதிர்ச்சி!

காமதேனு

தர்மபுரி அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளரைத் தாக்கிய போலி போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சார்பு ஆய்வாளர் செளந்தரராஜன் மற்றும் 2 பேர் போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரிடம், சார்பு ஆய்வாளர் செளந்தரராஜன் விசாரணை நடத்தினார். அவர்கள் தங்கள் நான்கு பேரையும் அரசு அதிகாரிகள் என்று கூறியதுடன், சார்பு ஆய்வாளர் செளந்தரராஜனை தாக்கினர். அத்துடன் வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து தர்மபுரி நகர் காவல்நிலையத்தில் செளந்தரராஜன் புகார் செய்தார்.

இதையடுத்து நடந்த விசாரணையில், இடமனேரி பகுதியைச் சேர்ந்த முருகன், முனிராஜ், விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதில் சந்தோஷ்குமார் ஆயுதப்படை போலீஸ்காரர் என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT