வீணா விஜயன், பினராயி விஜயன் 
க்ரைம்

கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

காமதேனு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அமலாக்கத் துறை

தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் (எஸ்எப்ஐஓ) விசாரணைக்கு எதிராக 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'எஸ்எப்ஐஓ' என்பது மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவாகும்.

எஸ்எப்ஐஓ விசாரணைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, தற்போது எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு (பிஎம்எல்ஏ) சட்டத்தின் கீழ், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை அமலாக்கத் துறை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை

கடந்த 2018 முதல் 2019 வரை 'கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட்' (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனம், வீணாவின் 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.1.72 கோடியை சட்டவிரோதமாக செலுத்தியதாக வருமான வரித்துறை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டது.

கனிம நிறுவனமான 'சிஎம்ஆர்எல்'-க்கு 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' எந்தசேவையையும் வழங்காமலேயே, கேரள முதல்வரின் மகளின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இந்த பணம் செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஸ்எப்ஐஓ, அமலாக்கத் துறை என அடுத்தடுத்து விசாரணை அமைப்புகள் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

SCROLL FOR NEXT