டிடிஎஃப் வாசன் 
க்ரைம்

டிடிஎஃப் வாசன் விவகாரம்: இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை

காமதேனு

டிடிஎஃப் வாசன் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை பதிவிட்டு பைக் சாகசம் செய்யும் இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் பைக்கில் சாகச பயணம் மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்த போதும் நீதிமன்றம் நிராகரித்தது. நேற்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி காட்டமாக தனது கருத்தை பதிவு செய்தார்.

டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், அவரது விலை உயர்ந்த பைக்கை எரிக்க வேண்டும் எனவும் நீதிபதி கருத்து கூறினார். இது டிடிஎஃப் வாசனுக்கு ஒரு பாடம் எனக்கூறி நீதிமன்ற காவலை நீட்டிப்பு  செய்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற கருத்தை மேற்கொள்காட்டி இளைஞர்களுக்கு புகைப்படத்துடன் சென்னை காவல்துறை எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. அதில், பைக் சாகசம் செய்தால் டிடிஎஃப் வாசன் நிலைமைதான் இளைஞர்களுக்கு என போலீஸ் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT