விபத்து நடந்த இடத்தில்  போலீஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் போலீஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
க்ரைம்

சென்னையில் மதுபானக்கூட மேற்கூரை இடிந்து 3 ஊழியர்கள் பலி... மெட்ரோ பணி காரணமா?

காமதேனு

சென்னை பிரபல ஓட்டலில் மதுபானக்கூடம் இடிந்து விழுந்து 3 ஊழியர்கள் பலியாயினர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் போலீஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் ஷேக்மேட் பப் என்ற மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று இரவு கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேற்கூரை இடிந்து விழுந்தபோது கேளிக்கை விடுதிக்குள் ஏராளமானோர் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், அவர்கள் ஓட்டல் ஊழியர்களான சென்னையைச் சேர்ந்த சைக்குளோன் ராஜ்(45) , மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ்(21), லாலே(22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறை வீரர்கள், போலீஸார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் படையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் போலீஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

செயின்ட் மேரிஸ் சாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால், மெட்ரோ பணியால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாநகர கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா நேரில் பார்வையிட்டார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்டடுள்ளன. இடிபாடுகளில் சிக்கி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மெட்ரோ வேலையால் இந்த விபத்து நடந்ததா என்று கூற முடியாது" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...  

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

SCROLL FOR NEXT