ANI
ANI
க்ரைம்

கசிந்த நைட்ரிக் அமிலம்... கருகிய 6 தொழிலாளர்கள்... நள்ளிரவில் நடந்த சோகம்

காமதேனு

ஆந்திர மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஏலூர் அருகே அக்கிரெட்டிகுடம் என்ற இடத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், நள்ளிரவில் ஆலையில் திடீரென தீ பற்றிக் கொண்டது. இதில் சிக்கிய 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ரசாயன ஆலை என்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்தனர் வீரர்கள். பின்னர் போராடி தீயை அணைத்தனர்.

இதனிடையே, ரசாயன தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம், மோனோமெதில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

SCROLL FOR NEXT