தென்னங்கன்று, கைதானவர்  
க்ரைம்

அதிர்ச்சி! மத்திய அரசு ஸ்டிக்கர்... தென்னங்கன்றுக்குள் 423 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

காமதேனு

வாகனத்தில் மத்தி அரசு ஸ்டிக்கர் ஓட்டி தென்னங்கன்றுக்குள் 423 கிலோ கஞ்சா மறைத்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ் மங்கலம் பரமக்குடி சாலை வழியாக அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம் ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், கைதானவர்கள்

சோதனையில் வாகனம் முழுவதும் தென்னங்மரக்கன்றுகள் இருந்தது. உடனே தென்னை மரக்கன்றுகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் தென்னங்கன்றுக்குள் மறைத்து கடத்தி சென்ற 423 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் வாகனத்திலிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். மூவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு ராமேஸ்வரம் கடல் வழியாக படகு மூலம் கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT