அமலாக்கத்துறை 
க்ரைம்

ரெய்டில் ரூ.2.33 கோடி பணம், 1024 கிராம் தங்கம் பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்

காமதேனு

திண்டுக்கல் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், பல்வேறு குற்ற ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம், 56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி எஸ்ஆர் குழுமம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாநகர், முகப்பேர் மற்றும் திருச்சி கோவை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னையில் ஆடிட்டர் சண்முகராஜா மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை மேலாளர் விக்டர் மற்றும் பொதுப்பணித்துறை திலகம் ஆகியோர் வீட்டுகளில் இந்த சோதனையானது நடைபெற்றது.

இது மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்ஆர் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிராத பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், 12.82 கோடி

ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT