சினிமா

வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் ‘என்சி22’ - படக் குழுவினர் யார் யார் தெரியுமா?

காமதேனு

நாக சைதன்யா- வெங்கட் பிரபு இணையும் படத்தின் தொழில்நுட்பக் குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 'என்சி22' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் படம் நாக சைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் படம். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்குப் படம். கதை, திரைக்கதை, இயக்கம் அவர்தான்!

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ரீனிவாசா சித்தூரி. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

அழகான காட்சிகளைப் படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான எஸ்,ஆர்.கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார்.

படத்தின் இன்னொரு ஸ்பெஷல் - 'மேஸ்ட்ரோ' இளையராஜாவும், 'லிட்டில் மேஸ்ட்ரோ' யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைப்பதுதான்.

ஆக்‌ஷன் - என்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT