சினிமா

`பொன்னியின் செல்வன்’ ஃபார்முலாவை கமல் படத்திலும் கடைப்பிடிக்கும் மணிரத்னம்?

காமதேனு

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கடைப்பிடித்த ஃபார்முலாவை இயக்குநர் மணிரத்னம் அடுத்து நடிகர் கமல்ஹாசன் படத்திலும் கடைப்பிடிக்க இருக்கிறார்.

’பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்திற்காக இணைகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸூடன் இணைந்து இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படங்களின் தயாரிப்பில் இணைந்திருக்கும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் முதல் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை சம்பளம் எதுவும் இல்லாமல் பணியாற்ற இருக்கிறார்கள். படம் தயாரானதும் இதன் மூலம் வரும் லாபத்தில் இருந்து இருவரும் குறிப்பிட்ட சதவீத தொகையை இலாபமாக எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தையும் முதல் காப்பி அடிப்படையிலேயே லைகாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். இரண்டு பாகங்களையும் சுமார் 200 கோடி அளவிலான பட்ஜெட்டில் லைகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது மெட்ராஸ் டாக்கீஸ். முதல் பாகத்திலேயே உலகம் முழுவதும் இருந்து 500 கோடிக்கும் அதிக வசூலைப் படம் பெற்றது. அதுபோலவே, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கும் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT