சினிமா

`விருமன்’ ரிலீஸ் எப்போது?: படக்குழு முக்கிய தகவல்

காமதேனு

தொடர்ந்து பெரிய படங்கள் வெளியானதால், ’விருமன்’ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முத்தையாக இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் முத்தையா கூறும்போது, ‘‘வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வார்கள். அதை யாராவது சுட்டிக்காட்ட வேண்டும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவுதான் நல்ல உறவு. அந்த நேர்மையைச் சொல்லும் படமாக ’விருமன்’ இருக்கும்'' என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுபற்றி படக்குழுவினரிடம் விசாரித்தபோது, தொடர்ந்து பிரம்மாண்ட படங்களாக வெளியானதால், ``விருமன்’ ரிலீஸ் பற்றி முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்'’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT