சினிமா

`தளபதி 67’ படப்பூஜை எப்போது?- வெளியான சூப்பர் அப்டேட்!

காமதேனு

நடிகர் விஜய்யின் 67-வது திரைப்படம் குறித்தான அறிவிப்பு வருகிற 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தன்னுடைய 67-வது படத்திற்காக மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வருகிற 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி வருகிற 5-ம் தேதியுடன் முப்பது வருடங்கள் ஆவதை ஒட்டி 67-வது படத்தின் பூஜை பட அறிவிப்புடன் பிரம்மாண்டமாக நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு புமோஷனல் வீடியோ போல ‘தளபதி 67’ படப்பூஜை முடிந்ததும் இந்தப் படத்தின் அறிவிப்பு குறித்தான புரோமோஷனல் வீடியோவையும் டிசம்பர் 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு முதற்கட்ட படப்பிடிப்பு 15 நாட்களும் அதற்கடுத்தக் கட்டப்படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்களும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். இதுமட்டுமல்லாது, பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT