சினிமா

விஷால் நடிக்கும் ‘லத்தி’: வெளியாகும் தேதி அறிவிப்பு

காமதேனு

'வீரமே வாகை சூடும்' படத்தை அடுத்து விஷால் நடித்துவரும் படம், ’லத்தி’. அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கும் இந்தப் படம் பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகிறது. இது விஷால் நடிக்கும் 32-வது படம். நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவந்தது. அங்கு பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வந்தனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT