சினிமா

நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட 'விருமன்' டீம் வழங்கிய ரூ.25 லட்சம்!

காமதேனு

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ’விருமன்’ படக் குழு 25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறங்காவலர் குழுக் கூட்டமும் நடைபெற்றது.

பின்னர், 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா, நடிகை அபர்ணா பாலமுரளி , இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் இயக்குநர் சாய் வசந்த், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், துணை நடிகை லட்சுமிப்பிரியா , மடோன் அஸ்வின், ஆவணப்பட இயக்குநர் - ஆர்.வி.ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில், ’விருமன்’ படக்குழு நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் வழங்கியது . ’விருமன்’ நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணைத் தயாரிப்பாளர் 2-டி ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து அதற்கான காசோலையை வழங்கினர்.

SCROLL FOR NEXT