சினிமா

விஜய்யின் `வாரிசு’ ஃபர்ஸ்ட் சிங்கிள்: பாடகர்கள் யார் தெரியுமா?

காமதேனு

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தனது 66-வது படமான ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பு உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் குறித்தானத் தகவல் வெளியாகி உள்ளது. பெப்பி லவ் பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை ஜோனிட்டா காந்தி மற்றும் சித் ஸ்ரீராம் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே, விவேக் நடிகர் விஜய்யின் ’சர்கார்’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்டப் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல, நடிகர் விஜய்யின் முந்தைய படமான மாஸ்டரில் தமன் இணைய இருந்த நிலையில், அப்போது தள்ளி போன வாய்ப்பு இப்போது ‘வாரிசு’ படத்தில் கைக்கூடியிருக்கிறது.

SCROLL FOR NEXT