’அரண்மனை4’  விஜய்சேதுபதி விலகல்?
சினிமா

’அரண்மனை-4’ படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்?

காமதேனு

‘அரண்மனை4’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘அரண்மனை4’ படம் குறித்தான அறிவிப்பு வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் கமர்ஷியல் ரீதியாக மக்களிடம் வரவேற்பு பெற, நான்காவது பாகம் குறித்தான அறிவிப்பும் வெளியானது. மேலும், நடிகர்கள் விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது ‘அரண்மனை4’ படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ் படங்களிலும் விஜய்சேதுபதி தற்போது பிஸியாக நடித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இவற்றை முன்னிட்டு இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்த இதன் படப்பிடிப்பில் விஜய்சேதுபதியால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

விஜய்சேதுபதி ‘அரண்மனை4’-ல் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகபோதும், நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ‘அரண்மனை4’ படக்குழுவுடன் விஜய்சேதுபதி இருந்த புகைப்படங்கள் அவரும் இந்தப் படத்தில் இருக்கிறார் என்பது உணர்த்தியது. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் இருப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததில், அவரது விலகலும் அறிவிப்பு ஏதுமின்றி நடந்திருப்பதாய் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT