#தளபதி68
#தளபதி68 
சினிமா

#தளபதி68... அறிவியல் புனைவு ஆக்‌ஷன் த்ரில்லரா?

காமதேனு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி68 திரைப்படம் குறித்து எகிறும் எதிர்பார்ப்புகள் மத்தியில் கசியும், புதிய அப்டேட் குறித்து ரசிகர்கள் பெரிதும் விவாதித்து வருகின்றனர்.

’லியோ’ திரைப்படத்துக்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து, அடுத்த திரைப்படமான தளபதி68-க்காக முழுமூச்சில் தயாராகி வருகிறார் விஜய். இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், இதுவரை திரையில் ரசிகர்கள் கண்டிராத புதிய தோற்றத்திலான விஜய் கதாப்பாத்திரத்தை உருவாக்கும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துக்கான பணியில் விஜய் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார்.

ரசிகர் உருவாக்கிய #தளபதி68 போஸ்டர்

அப்படி விஜய் சிரத்தையுடன் தென்படும் புகைப்பட ஒன்றை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, ’எதிர்காலத்துக்கு நல்வரவு’ என்ற வாசகத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தின் அடிப்படையில் கூகுளைத் துழாவிய ரசிகர்கள், எதிர்காலத்துக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில் பலவற்றையும் விவாதித்து வருகின்றனர். அவை அறிவியல் ஆய்விதழ்கள் முதல் ஓடிடி தொடர்கள் வரை பல்வேறு முன்மாதிரி தொழில்நுட்பங்களை பிரதிபலிக்கின்றன.

இவற்றை முன்வைத்து தளபதி68 திரைப்படம் முழுமையான ’சயின்ஸ் ஃபிக்சன் ஆக்‌ஷன் த்ரில்லராக’ இருக்கும் எனவும் தங்களது கணிப்புகளை ரசிகர்கள் கடைபரப்பி வருகின்றனர். விஜய் வலம் வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் புகைப்படங்களைக் கொண்டு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் வைரலாகி வருகின்றன.

இவற்றிடையே தந்தை - மகன் என இரட்டை தோற்றங்களில் தோன்றும், விஜயின் மூத்த கதாப்பாத்திரத்துக்கு சிம்ரனிடம் பேச்சுவார்த்தை முடிவடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஜோதிகா உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் அடிபட்ட சூழலில், தற்போது அந்த கணிப்பு சிம்ரனிடம் தாவி இருக்கிறது. இளம்வயது விஜய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாகவும், கூடுதல் இளமைக்காக இன்னொரு நாயகியும் ஒற்றைப் பாடலுக்கு இணையவிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT