சினிமா

இயக்குநர் வெங்கட் பிரபுவை கவுரவித்த அமீரகம்!

காமதேனு

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.

நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால், பிரணிதா, த்ரிஷா, மீனா, ஆண்ட்ரியா, அமலா பால் உட்பட பலர் ஏற்கெனவே இந்த விசாவை பெற்றுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர் உட்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் இப்போது இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபு, தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT