சினிமா

`வாரிசு’ முதல் பாடல் வெளியீடு: படக்குழு கொடுத்த அப்டேட்!

காமதேனு

‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அப்டேட் கொடுத்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வம்சி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷ்யாம் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  

படத்தின் முதல் பாடல் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என முன்பே தகவல்கள் வெளியான நிலையில் இன்று படக்குழு முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வமான அப்டேட் கொடுத்துள்ளது. முதல் பாடலின் புரோமோ இன்று மாலை 6.30க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடனமாடுவது போன்ற நிழல் உருவ போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஏற்கெனவே, தமன் இசையில் விஜய், ராஷ்மிகாவின் துள்ளலான நடனத்தில் ’ரஞ்சிதமே’ பாடல் இணையத்தில் லீக் ஆனது. இன்று வெளியாக இருக்கும் பாடல் ‘ரஞ்சிதமே’ பாடலா அல்லது வேறு ஏதேனும் பாடல் வெளியாக இருக்கிறதா என்பது இன்று மாலை தெரியவரும்.  

SCROLL FOR NEXT