சினிமா

ஓடிடி-யில் அஜித்தின் ’வலிமை’ அசத்தல் சாதனை

காமதேனு

அஜித் நடித்துள்ள `வலிமை' படம் ஓடிடி-யில் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம், ’வலிமை’. நாயகியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா, சுமித்ரா, குர்பானி ஜட்ஜ், துருவன் உட்பட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் பேசப்பட்டன.

இந்தப் படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது.

தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் ரிலீசான இந்தப் படம் ஒரே வாரத்தில் 500 மில்லியன் நேரம் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனை. இதை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

SCROLL FOR NEXT